நாம் இந்த உலகில் என்ன தேடிகொண்டிருகிறோம். சிறிது அலசிபார்போம்.ஒருவன் பசிக்கு உணவு கிடைத்தால் பசியடங்கியபின் திருப்தி ஆகிறான். ஒருவன் தான் ஒரு பெரிய பணக்காரனாக ஆக ஆசை பட்டு அந்த ஆசை நிறைவேறிய பின் திருப்தி அடைகிறான். ஒருவன் தன் மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய பட்டதாரியாக ஆனபின் தன் மகனின் நிலையை நினைத்து திருப்தி அடைகிறான் . இந்த நிகழ்வுகளில் திருப்தி என்பதே இறுதியான அனுபவமாக உள்ளதை பார்க்கலாம். நாம் ஒவ்வொரு செயலும் திருப்தி பெறவே செய்துகொண்டிருக்கிறோம் என்பது நன்றாக விளங்கும். முழுமையான திருப்தி எங்கே கிடைக்கும் என்ற தேடலில் நாம் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறோம். இறக்கும் வரை தொடர்கிறோம். மறுபடியும் பிறக்கிறோம் திருப்தியை தேடி தேடி. காலசக்கரத்தில் தொடர்ந்து சுழல்கிறோம்.
திருப்தி எங்கே உருவாகிறது என்று பார்த்தால் நம் உள்ளே தான் உருவாகுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நம் உள்ளே உருவாகும் திருப்தியை ஏன் வெளியே தேடவேண்டும். நாமே திருப்தியின் சுயரூபமாக இருக்கிறோம் என்பதை தெரியாததால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. நாம் திருப்தியாக உள்ளோம் என்பதை எப்படி தெரிந்து தெளிவது. நாம் யார்? என்ற தெளிவை பெரும்போது நம்முள் எல்லாம் அடக்கம் என்பதை புரிந்து மோனநிலையை அடைந்தால் இறைநிலை அடைந்து இன்புருவாக பிறவாநிலை அடையலாம்.
இப்போது நம்மில் திருப்தி இல்லை என்ற அறியாமை நீங்கி மாயையில் நாம் இருக்கிறோம் என்ற தெளிவை பெற்றால் எப்போதுமே திருப்தியாக இறைநிலையையிலேயே நிலைத்து இருக்கலாம்.

No comments:
Post a Comment