நான் நன்றாக வசதியாக நலமாக, வளமாக வாழ்ந்து வருகின்றேன். எனக்கு எதற்கு? ஆன்மீகம், நான், இறைநிலை, கோயில், குளங்கள், மாயை, சித்தர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களை பற்றிய கதைகள் போன்ற விளக்கங்கள் எல்லாம் தேவையா?, அதைவிடுத்து சுற்றுலா இடங்கள், மற்ற உலகியல் செய்திகள், நண்பர்களுடன் உரையாடல்கள், உலக நடப்புகள் பற்றி தெரிந்து கொண்டு பொழுதை போக்க நினைக்கும் எனக்கு எதற்கு? இந்த தேவையற்ற விளக்கங்கள். என்று நீங்கள் முடிவு செய்து எனக்கு இறைநிலை அடைய ஆசை இல்லை. இந்த உலகத்திலேயே இன்பமுடன் வாழ வழி இருக்கிறதா?
என்றால் இருக்கிறது.
நான் இதுவரை பத்து பிறவிகள் எடுத்துவிட்டேன். அதில் ஆறு பிறவிகள் துன்ப பிறவியாகவும், நான்கு பிறவிகள் எல்லா வசதியுடன் கூடிய அற்புதப்பிறவியாக அனுபவித்தேன் என்று ஒருவன் தெரிந்து கொண்டால். அவன் இந்த இன்ப, துன்ப வாழ்கையை தாண்டி இந்த இரண்டும் இல்லாத ஆனந்த அமைதியான வாழ்க்கை எப்படி கிடைக்கும்? அதற்கு என்ன வழி? என்று ஆராய்வான். அல்லது போனபிறவி எப்படி இன்பமாக அமைந்தது என்று ஆராய்ந்து , வந்த மற்றும் வரபோகும் பிறவியை எப்படி நல்ல இன்பமான பிறவியாக அமைத்துகொள்வது? என்று ஆராய்வான். இந்த இரண்டையும் தெரிந்து கொள்வதற்க்கு இந்த வாழ்க்கை இறைவன் ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டது.
இருப்பதோ கொஞ்ச காலம் என்று இறப்பு வருமோ? என்று தெரியாத நிலையில்,கண்டபடி வாழ்ந்து, கண்டதை படித்து வீண் காலம் கழித்தால் இறைநிலையை அடையவோ? அடுத்த பிறவியை நல்ல வளமான பிறவியாய் அமைதுக்கொள்ளவோ? முடியாது. ஆன்மா அடுத்த பிறவி எடுக்கும் போது தன்னுடன் எதை எடுத்து செல்கிறது?. இந்த பிறவியில் சேர்த்த சொத்தையா, பணத்தையா, கல்வி அறிவையா, செல்வாக்கையா. எதையும் இல்லை. நாம் இந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களை மட்டும் தான் தன்னுடன் எடுத்து செல்கிறது. அதன் அடிப்படையில்தான் வளமான வாழ்வோ? அல்லது தரித்திர வாழ்வோ? அமைகிறது.
இன்றைய கால கட்டத்தில் பொருள் சேர்ப்பதில் மட்டுமே முனைப்பாக பலரது வாழ்வு உள்ளது. தனக்கு, தனது சந்ததிக்கு பொருள் சேர்ப்பதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். ஆனால் தன் அடுத்தபிறவிக்கு சேர்த்துவைக்கும் முறையை அறிய முயற்சிப்பதில்லை. இந்த பிறவியில் பொருள் தேடுவதோடு நில்லாமல், புண்ணியத்தையும் திரட்டினால் அடுத்த பிறவி நலமாக அமையும். இந்த பிறவியில் கிடைத்த பொருளை கொண்டு புண்ணியகாரியங்களை செய்து பாவ காரியங்களை செய்யாமல் இருந்தால் அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையும். அதனால் கிடைக்கும் இந்த கொஞ்ச காலத்தில் புண்ணியங்களை திரட்டுவதில் நேரத்தை செலவு செய்தால் நலம் உண்டாகும். தொண்டும், தருமமுமே இந்த உலகத்திலேயே இன்பமுடன் வாழ வழி, இதனால் நம் அடுத்த பிறவிக்கு வளம் சேர்க்கும். உலகியல் வாழ்க்கை சிறக்க வழிவகுக்கும்.

No comments:
Post a Comment