பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Friday, August 17, 2012

அச்சாணி தேவை



ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருவரும் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டுள்ள இரு சக்கரங்களை போல ஒரே அளவு உடையதாக இருக்க வேண்டும். இதில் ஒரு சக்கரம் பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருப்பின் அந்த வண்டியானது சரியாக ஓடாமல் குடை சாய்ந்துவிடும். அதுபோல, வாழ்க்கையில் இருவருக்கும் ஒத்த மன நிலை இல்லையெனில் அந்த குடும்பமும் ஒழுங்கற்ற சக்கரம் உள்ள வண்டிபோல ஒரு நாள் குடை சாய்ந்துவிடும், ஆம். ஆகவேதான் கணவன், மனைவி இருவரும் தங்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசி, இருவரில் யாருடைய நோக்கமும் செல்கின்ற பாதையும் தெளிவாக உள்ளதோ அந்த பாதையில் மற்றவரும் மாறிக்கொள்ள முயலவேண்டும். அதை விடுத்து தனித்தனி பாதையில் செல்ல முயன்றால் அந்தவண்டியானது எப்படி ஊர் போய் சேராதோ அதுபோல இவர்களின் வாழ்க்கையும் தடம் மாறி தகர்ந்துவிடும். கணவன் மனைவி ஒற்றுமையாக உள்ள குடும்பத்தில் மட்டுமே அவர்களது குழந்தைகளும் நல்ல மன நிலையில் வளர்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள். கருத்துவேற்றுமை உள்ள கணவன் மனைவி அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதை பார்க்கும் குழந்தைகள் அவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு ஒற்றுமையின்றி தங்களது வாழ்க்கையையும் தொலைத்திவிடுவர்.

வண்டி உருண்டோட அச்சாணி தேவை

ஒரு நல்ல குடும்பம் உருவாக வேண்டுமெனில் மாட்டு வண்டியின் சக்கரம் கழன்று விடாமல் ஓட அச்சாணி என்ற பொருள் எப்படி அவசியமோ அதுபோல, வாழ்க்கை சக்கரம் கழன்றுவிடாமல் ஓட நல்ல குரு தேவை. எனவே இருவரும் ஒத்த மன நிலையில் வாழ ஒரு நல்ல பாதையை தேர்ந்தெடுத்து அந்த பாதைக்கு வழிகாட்டியான குருவின் வழியில் செல்லுங்கள்.

Monday, August 13, 2012

பத்தாம் வாசல்


நம்முடைய உடம்பில் ஒன்பது ஓட்டை உள்ளது.  ஆனால் பத்தாம் ஓட்டை ஒன்று உள்ளது யாரும் அறியார்.  அது அண்ணாக்குக்கு அருகில் உள்ளது.  அதை இறையருளால் திறந்துகொண்டால் உயிர் இருக்கும் இடத்திற்கு செல்லலாம்.  
பத்தாம் வாசல் வழியாக மூச்சு காற்றை மேல் ஏற்றினால் காற்று உயிர் அக்னி வரை  சென்று வெப்பத்தை உடம்பு முழுவதும் பாய்ச்சும்.  அதனால் உடம்பு சுட்டதேகமாக மாறும் பின்னர் ஞானதேகம் பெறலாம் 

  
எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் 
எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்.

எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணினால் என்ன வரும்.10 வரும்.  நம் உடம்பில் ஒன்பது வாசல் உள்ளது இது எல்லாருக்கும் தெரியும்.  ஆனால் பத்தாவதாக ஒரு வாசல் இருக்கிறது.  அந்த வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.

எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கே
எட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவே - வள்ளலார் பாடல்.


                 

சுப்பையா என்ற மகான் 
திருகழுகுன்றதில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.  அவர் 1960 இல் ஜீவசமாதி 
அடைந்துள்ளார்.  அவரின் விருப்பபடி . அவர் ஜீவ சமாதி அடைந்த 48 ஆம் 
நாள் அவரின் உடலை அதிகாரிகள் முன்நிலையில் தோண்டி எடுத்து பார்த்ததில் 
அவருடைய உடல் கெடாமல் அப்படியே இருந்ததை கண்டு ஆச்சிர்யபட்டு அவருக்கு கோயில் கட்டியுள்ளார்கள்.  இது 1960 நாளிதழ்களில் பிரசுரிக்கபட்டுள்ளது. இதுவே சுட்டதேகதிற்கு எடுத்துகாட்டு ஆகும். 

சுழுமுனை
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசமெட்டும்
பதியவிடங் சுழுமுனை என்றதற்கு பேராம். – அகத்தியர் பாடல்

சுழுமுனை என்பது அண்ணாக்கிற்கு மேல் உள்ளயிடம். மனத்தை சுழுமுனையில் நிறுத்தி வாசி இடகலை மற்றும் வடகலை அக்னியில் கூடி மூன்றும் ஒன்றாகும். உள் சென்ற காற்று பத்தாம்வசலில் ஏறும், மூக்கில் காற்று வெளியே வராது.  ஐந்து புலன்களும் ஒடுங்கும். ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றாகி உஷ்ணம் கிழே பாயும். உஷ்ணம் உடம்பை வேதித்து காயசித்தி உண்டாகும்.

Friday, August 3, 2012

யோகி


யோகி என்பவர் சதா தனது மன எண்ணங்களின் மூலமாக பரமாத்மாவை தொடர்பு கொண்டிருப்பவர். கர்மவிதியை பற்றி நன்கு உணர்ந்தவர். கர்ம விதியை உணர்ந்திருப்பதால், தனது மனம், சொல், அல்லது செயல் மூலமாக எவருக்கும் துன்பம் நேரிடாதவாறு கவனத்துடன் இருப்பார். இவர் பரமாத்மாவிடமிருந்து தான் அடைந்த அமைதி, சுகம், பேரானந்தம் ஆகியவற்றை மற்றவர்களும், அடைந்து நன்மை பெறவேண்டும் என்கின்ற பொது நல நோக்கத்துடன் பரந்த உள்ளம் கொண்டுள்ள, பரோபகாரியாக விளங்குவதால், இந்த சமுதாயத்திலேயே பற்றற்றும், அன்புடனும் இருந்து தனது கடமைகளில் தவறாது, தமது குடும்பத்தாருக்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டியதை செய்யாமல் காவி கட்டி காட்டிற்கு அல்லது குகைக்கு சென்று ஒதுங்கிவிடமாட்டார். இந்த விழிப்புணர்ச்சியின் காரணமாக எந்த ஒரு துன்பமோ, அல்லது பிரச்சனையோ ஒரு யோகியை நிலைகுலையச் செய்யாது.

அன்பு, ஞானம், தியானம், ஒழுக்கம் மற்றும் பற்றற்ற நிலை போன்றவைகள் அவரது நடைமுறை வாழ்க்கையாகும். யோகிக்கு துறவு என்பது உடல் சம்பந்தமான துறவல்ல. ஆனால் எதிர்மறையான எண்ணங்களையும், குணங்களையும் துறப்பது ஆகும். இவர் சந்நியாசிகளிலிருந்து மாறுபடுகிறார். குடும்பத்திலேயே இருக்கிறார், சமுதாயப் பொறுப்புகளை ஏற்கிறார், ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுதும் அந்த செயலால் ஏற்படும் விளைவுகளுக்கு தான் பொறுப்பல்ல , செயல்களின் முடிவுகளுக்கு கவலைப்பட தேவையும் இல்லை, விதைகளை விதைப்பது மட்டுமே நம் வேலை  எதிர்காலத்தில் பழங்களை கொடுப்பது அவன் செயல். நான் கடவுளின் கருவி என்ற மன நிலையில் மட்டுமே செயல்படுவார்.

கர்மா


ஆத்மாவானது தனது உடலின் வாயிலாக செயல்பட்டு வருவதையே கர்மா என்கிறோம். நாம் உடலினை பயன்படுத்தி பலவகையான செயல்களை செய்கிறோம். அதாவது,நடப்பது,சுவாசிப்பது,காண்பது, பேசுவது,தொடுவது போன்றவை. இவைகள் அனத்துமே செயல்கள்
( கர்மாக்கள் ) ஆகும்.
நமது மனோபாவம், எண்ணம்,குணநலன்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப நமது செயல்கள் அமையும். இந்த செயல்களுக்கு நாம்தான் முழு பொறுப்பு. இந்த செயல்களினாலேயே நல்லது, கெட்டது என்ற கர்மாக்களை சேர்த்துக் கொள்கிறோம். கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்பமும், துன்பமும் இந்த ஆத்மா அடைகிறது. தேக உணர்விலிருந்து செயலாற்றி வருவதை விட்டுவிட்டு, ஆத்மாவை அறிந்து ஆத்ம உணர்வுடன் செயலாற்றினால் கர்மாவை குறைக்க முடியும்.

நான் ஒரு ஆத்மா


நான் ஒரு ஆத்மா என்றதை உணர்ந்த ஒவ்வொருவரும் நம்மை படைத்த பரமாத்மா-வுடன் தொடர்பு கொள்ளும் வழிமுறையை அறிந்து கொள்வது அவசியம். எப்பொழுது நாம் அழிவற்ற ஆத்மா என்றும், நாம் தாங்கி வந்துள்ள உடல் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது, அது மீண்டும் பஞ்சபூதங்களுடன் ஒடுங்கிவிடும், அதாவது காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மற்றும் மண்ணிலிருந்து வந்த இந்த உடல் மீண்டும் மண்ணுடன் கலந்துவிடும், என்பதனை புரிந்துகொண்டு, எடுத்த இந்த பிறவியிலாவது இந்த உடலை கருவியாக பயன் படுத்தி பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இணைய வேண்டும். 
விட்டுவிடப் போகுது உயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் – பட்டினத்தார்

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்
சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே. திருமூலர்.

இவ்வாரு மண்ணோடு மண்ணாக போகும் இந்த தேகத்தை தீய பழக்கவழக்கங்களால் பாழாக்காமல், நற் சிந்தனைகளால் நமது மனத்தினை பழக்கி, ஒரு நிலைப் படுத்தி ஆழ்ந்த தியானத்தில் அனுதினமும் ஈடுபட்டு பரமாத்மாவை அறிய வேண்டும். அவருடன் இணையவேண்டும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. – திருமூலர்.