பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Thursday, July 26, 2012

தூங்காமல் தூங்கும் நிலை

மனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூங்குவதில்தான் செலவழிக்கிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.

சித்தர் பெருமக்களும் தூக்கம் பற்றி நிறையவே கூறியிருக்கின்றனர். தூக்கம் என்பது மனிதனுக்கு மிக அவசியமானது என்றாலும் கூட சித்தர்களின் கருத்தில் தூக்கம் என்பது உடல் தளர்வாகவும் உள்ளம் ஒரு முகமாகவும் இருக்கும் ஒரு நிலையையே குறிப்பிடுகின்றனர். இதனை தூங்காமல் தூங்கும் நிலை என்கின்றனர். பத்திரகிரியார் கூட இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார்


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.



கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.
கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.


தூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். மேலும் நாம் தூங்கும் போது நம்முடைய மூச்சு விரயமாவதாகவும் சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சியும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.


யோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்கவேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.


இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா? என்கிற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை அவரவர்களது வாழ்க்கை முறையே முடிவுசெய்யும்.

No comments: