பாலை மணலில் ஓடும்
மான் கானல் நீரை, நீரென எண்ணி ஓடுவதைப் போல, மாந்தர்கள் பூவுலக வாழ்க்கையை நிஜம் என்று நம்பி மகிழ்ச்சியில் மூழ்குகிறார்கள். ஆனால் புலன்களை வென்று மனதை மேல் நிலைக்கு
கொண்டு சென்றவர்கள் இந்தப் பூவுலக வாழ்க்கையில் மயங்குவதில்லை.
அவர்கள் மெய்ப் பொருளை மட்டுமே நம்புவார்கள். கானல் நீரை நிஜம்
என்று நம்பும் மான் ஓடிக் கொண்டே தான் இருக்கும் கானல்
நீரும் தள்ளி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். முடிவில்
நீர் கிடைக்காத மான் களைத்து விழும்.
மனித வாழ்க்கையும் கானல் நீரை நம்பி ஓடும் மான் போல ஆகிவிடுகிறது, மெய் பொருள் என்ன என்று அறியாமலே அவர்கள் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது . இந்தக் கருத்தினை மிக எளிய வார்த்தைகளில் அருமையாக எடுத்துக் காட்டுகிறார் பாம்பாட்டிச் சித்தர்.
இதோ அவர் பாடல்..
"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!"

No comments:
Post a Comment