வாழ்க்கையின் ஓட்ட்த்தில்
நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில்
தலையாயதும், நிலையானதும், உண்மையானதும் தன்னை பற்றி அறிதலே ஆகும்.
சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், இவர்களே இதை முதன்மை படுத்தி சொல்லும் போது தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த மற்ற அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,
"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"
என்றும்,
"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்"
என்றும்,
"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே"
எனச் சொல்கிறார் திருமூலர்.
இதையே சிவவாக்கியார்,
"என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே"
என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள். நாமும் நம்மை அறிய முயல்வோமாக.
No comments:
Post a Comment