பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Friday, August 17, 2012

அச்சாணி தேவை



ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருவரும் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டுள்ள இரு சக்கரங்களை போல ஒரே அளவு உடையதாக இருக்க வேண்டும். இதில் ஒரு சக்கரம் பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருப்பின் அந்த வண்டியானது சரியாக ஓடாமல் குடை சாய்ந்துவிடும். அதுபோல, வாழ்க்கையில் இருவருக்கும் ஒத்த மன நிலை இல்லையெனில் அந்த குடும்பமும் ஒழுங்கற்ற சக்கரம் உள்ள வண்டிபோல ஒரு நாள் குடை சாய்ந்துவிடும், ஆம். ஆகவேதான் கணவன், மனைவி இருவரும் தங்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசி, இருவரில் யாருடைய நோக்கமும் செல்கின்ற பாதையும் தெளிவாக உள்ளதோ அந்த பாதையில் மற்றவரும் மாறிக்கொள்ள முயலவேண்டும். அதை விடுத்து தனித்தனி பாதையில் செல்ல முயன்றால் அந்தவண்டியானது எப்படி ஊர் போய் சேராதோ அதுபோல இவர்களின் வாழ்க்கையும் தடம் மாறி தகர்ந்துவிடும். கணவன் மனைவி ஒற்றுமையாக உள்ள குடும்பத்தில் மட்டுமே அவர்களது குழந்தைகளும் நல்ல மன நிலையில் வளர்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள். கருத்துவேற்றுமை உள்ள கணவன் மனைவி அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதை பார்க்கும் குழந்தைகள் அவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு ஒற்றுமையின்றி தங்களது வாழ்க்கையையும் தொலைத்திவிடுவர்.

வண்டி உருண்டோட அச்சாணி தேவை

ஒரு நல்ல குடும்பம் உருவாக வேண்டுமெனில் மாட்டு வண்டியின் சக்கரம் கழன்று விடாமல் ஓட அச்சாணி என்ற பொருள் எப்படி அவசியமோ அதுபோல, வாழ்க்கை சக்கரம் கழன்றுவிடாமல் ஓட நல்ல குரு தேவை. எனவே இருவரும் ஒத்த மன நிலையில் வாழ ஒரு நல்ல பாதையை தேர்ந்தெடுத்து அந்த பாதைக்கு வழிகாட்டியான குருவின் வழியில் செல்லுங்கள்.

No comments: