பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Thursday, February 28, 2013

"சீவ பிரம்ம ஐக்கியம்"



முற்காலத்தில் தவம் செய்து வந்தவர்களில் சிலர் உடல் தத்துவத்தை தெளிவாக உணர்ந்திருந்தனர், பஞ்சபூதங்களில் மண் எனும் தத்துவமே பருவுடலாக தன்மாற்றம் பெற்றிருப்பதைத் தெளிவாக அறிந்திருந்தனர். உடல் செல்கள் அழிந்தால்தான் உயிர் அழியும் என்று திருமூலர் கூறுகிறார்.

மரங்களிலுள்ள உயிரணுக்கள் கல் போன்று மாறிவிடுவதை விஞ்ஞானம்
கண்டறிந்து இருக்கிறது. இதுபோல் மனித உடலில் செல்களை மண் போன்று மாற்றுவற்கு மெய்ஞானம் கண்டறிந்து இருக்கிறது. உடல் செல்களுக்கான மூலப்பொருளாகிய விந்து சக்தியைப் பதங்கப்படுத்தி உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும் உயிர் உடலை விட்டுப் பிரியாது இருக்க, விந்து சக்தியை உடல் செல்களிலேயே பதங்கப்படுத்திய சில சித்தர்கள் நீண்ட நாள் வாழ்ந்து மரணமில்லாப் பெருவாழ்வு நிலை அடைந்துள்ளனர்.

ஒரு கால கட்டத்தில் மன இயக்கத்தை நிறுத்தி உணர்வு நிலை வாழ்க்கையை முடித்து கொண்டனர். இந்நிலையை அடைய மனத்தை இறைநிலையோடு நிலைக்கச் செய்தும் உடலுறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தும் கலையில் வெற்றியடைந்தும், உடலை மண் உள்ள காலம் மட்டும் அழியாத நிலையையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
அத்தகைய சித்தர்களின் உடல் அடக்கம் பெற்ற கோவில்களை             (சித்தர்களின் சமாதிகள்) நம் நாட்டில் இன்றும் காணலாம்.

இயற்கையில் நம் உடலுக்கு அமைந்திருக்கும் ஆயுட்காலத்திற்குள் முக்தி நிலையை அடைய முடியும். இச்சமாதி நிலையை அடைவதற்கு முன்னால் நோயின் காரணமாகவோ, பிற காரணங்களாலோ உடல் சிதைந்த உயிர் பிரிந்து விடுமானால் அதுதான் உடலுக்கு மரணம் எனப்படும். 
 உடலுக்கு மரணம் ஏற்படுவதற்கு முன்னர் சீவகாலத்திலேயே முக்தி அடைவதுதான் "சீவ பிரம்ம ஐக்கியம்" அல்லது "மரணமில்லாப் பெருவாழ்வு "ஆகும்.

மனிதன் புலன் மயக்கத்திலேயே சிக்கி துன்பங்களை அனுபவிக்கிறான், வாழ்வின் நோக்கமான இறைநிலை உணர்தல் என்ற நோக்கத்தை மறந்துவிடுகிறான், தற்போதுள்ள கல்விமுறையில் அதற்க்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படவில்லை. தற்போதைய கல்வி முறையில்  1) பாலுணர்வுக்கல்வி 2) ஆன்மீகக் மேம்பாட்டுக்கல்வி இந்த இரண்டு பொருள்ைப் பற்றி எல்லோரும் விளக்கம் பெற வேண்டும். அதற்கான பயிற்சி முறைகளும் அறிந்து கொள்ள வேண்டும், பாலுணர்வு சிற்றின்பத்தையும், ஆன்மீக உணர்வு பேரின்பத்தையும் தருகின்றன.

சிற்றின்பத்தின் வாயிலாக நோயையும், பேரின்பத்தின் வாயிலாக நோயற்ற ஆரோக்கியமான சீவகாந்த ஆற்றலையும் பெறமுடியும். மனிதன் தன் சீவகாந்த ஆற்றலை அதிகமாக்க வேண்டுமானால், உயிர்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கவேண்டும், உயிர்சத்துக்களை அதிகரிக்க விந்துநாதம், ய்மையாகவும் இருக்க வேண்டும், விந்துசக்தியை அளவு அதிகமாகவும், அழுத்தமாகவும் ய்மையாகும் ஆக்கிவிட்டால் நீண்ட நாள் உயிர் வாழலாம். முதுமையைத்தள்ளி போடலாம். இளமையோடு வாழலாம். நோயில்லாமல் உடல் நலத்துடன் வாழலாம். தேவையான விந்துவை போதிய அளவு கெட்டிப்படச் செய்துவிட்டால் உயிர் பிரியாமலே அதை உடலிலேயே நிலைக்க வைத்து விடவும் செய்யலாம், வாழ்ந்தது போதும் என்ற நினைவு ஏற்படும் போது மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம், மனஇயக்கம், உடலியக்கம் இரண்டும் நின்று விட்ட பின் உடலிலேயே உயிர் அடக்கம் பெற்று இருக்கும். சீவன் உடலில் இயங்கும் காலத்திலேயே மனம் தூய்மை பெற்று ஆதிக்குச் சமமான நிலையை அடைந்து விடுவதால் இந்நிலையை "சீவ சமாதி" அல்லது "சீவ பிரம்ம ஐக்கியம்" என்கிறோம்.

No comments: