இராஜ யோகம்
செய்வதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எண்படிகள் இருக்கின்றன.
இயமம்
அஹிம்சை அல்லது
உயிர்வதை செய்யாதிருத்தல் ஆகும். பொய் களவு செய்யாதிருத்தல்.
எப்போதும் மனம் சுத்தமாயும் நல்லதையே நினைத்தும் செய்தும் இருத்தல்.
தேக சுத்தியுடனும், மன சந்தோஷத்துடனும் முறைபடி யோகம், தியானம் செய்ய
அமைதியாயிருத்தல். ஆத்ம ஞானம் அடைய அணுசாரனையாக கிரமப்படி எல்லாமே செய்தல் ஆகும்.
ஆசனம்
முக்கிய ஆசனங்கள் 16 ஆகும்.
பிரணாயாமம்
பிரணாயாமம் என்பது வாயுவை கட்டுப்படுத்துதல் ஆகும். இதன் விதிகள் மித போசனம் செய்தல், நித்திரை அதிகம் செய்யாதிருத்தல், சோம்பல் இன்றி, ஆசாபாசங்களை விட்டு
இருத்தல் ஆகும்.
இதில் 4 நிலைகள் இருக்கிறது.
1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதற்கு
பூரகம் என்று பெயர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.
3. இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.
4. வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.
3. இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.
4. வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர்.
குறிப்பு: பகிரங்க கும்பகம் - 60-லிருந்து 120 வினாடிகள். 6 மாத, ஒரு வருட பழக்கத்தில்
தான் பூரணமாய் செய்ய வேண்டும்.
பிரத்யாகாரம்
பிரத்யாகாரம் என்பது மனதை அடக்குதல் ஆகும். ஐம்புலன்களை கட்டுப்படுத்துதல் ஆகும்.
தாரணை
தாரணை என்பது மனதை
ஒருமுகப்படுத்துதல் ஆகும். ஓரு வஸ்துவில் சிந்தனையை நிறுத்தி அதிலேயே லயித்து
இருப்பதாகும்.
தியானம்
தியானம் என்பது மனதை
அடக்கி ஒரு நிலைப்படுத்தி புருவமத்தி அல்லது நாசிநுனியில் நாட்டம் வைத்து அதில்
லயித்திருப்பதாகும்.
சமாதி
சமாதி என்பது
தியானத்தின் முடிவு ஆகும். மனதை கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்திய நிலையில் அதில் லயித்து ஜோதியைக் கண்டு அதிலேயே மூழ்கி புறசலனஙகளில்லாமல் இருத்தல், சுவாசத்தை ஆக்ஞாவில் நிறுத்தி அதில் நாட்டத்தை வைத்து அதில் தரிசித்து இருத்தல் ஆகும்.
No comments:
Post a Comment