யோகி என்பவர் சதா
தனது மன எண்ணங்களின் மூலமாக பரமாத்மாவை தொடர்பு கொண்டிருப்பவர். கர்மவிதியை பற்றி
நன்கு உணர்ந்தவர். கர்ம விதியை உணர்ந்திருப்பதால், தனது மனம், சொல், அல்லது செயல்
மூலமாக எவருக்கும் துன்பம் நேரிடாதவாறு கவனத்துடன் இருப்பார். இவர்
பரமாத்மாவிடமிருந்து தான் அடைந்த அமைதி, சுகம், பேரானந்தம் ஆகியவற்றை மற்றவர்களும்,
அடைந்து நன்மை பெறவேண்டும் என்கின்ற பொது நல நோக்கத்துடன் பரந்த உள்ளம் கொண்டுள்ள,
பரோபகாரியாக விளங்குவதால், இந்த சமுதாயத்திலேயே பற்றற்றும், அன்புடனும் இருந்து
தனது கடமைகளில் தவறாது, தமது குடும்பத்தாருக்கும், சமுதாயத்திற்கும் செய்ய
வேண்டியதை செய்யாமல் காவி கட்டி காட்டிற்கு அல்லது குகைக்கு சென்று
ஒதுங்கிவிடமாட்டார். இந்த விழிப்புணர்ச்சியின் காரணமாக எந்த ஒரு துன்பமோ, அல்லது
பிரச்சனையோ ஒரு யோகியை நிலைகுலையச் செய்யாது.
அன்பு, ஞானம், தியானம், ஒழுக்கம் மற்றும் பற்றற்ற நிலை போன்றவைகள் அவரது நடைமுறை வாழ்க்கையாகும். யோகிக்கு துறவு என்பது உடல் சம்பந்தமான துறவல்ல. ஆனால் எதிர்மறையான எண்ணங்களையும், குணங்களையும் துறப்பது ஆகும். இவர் சந்நியாசிகளிலிருந்து மாறுபடுகிறார். குடும்பத்திலேயே இருக்கிறார், சமுதாயப் பொறுப்புகளை ஏற்கிறார், ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுதும் அந்த செயலால் ஏற்படும் விளைவுகளுக்கு தான் பொறுப்பல்ல , செயல்களின் முடிவுகளுக்கு கவலைப்பட தேவையும் இல்லை, விதைகளை விதைப்பது மட்டுமே நம் வேலை எதிர்காலத்தில் பழங்களை கொடுப்பது அவன் செயல். நான் கடவுளின் கருவி என்ற மன நிலையில் மட்டுமே செயல்படுவார்.

No comments:
Post a Comment