---------------------------------------------------------------------------------------------------------------------------------
சிந்தனை செய் மனமே !!
வல்லமை உள்ளவன் நீ தானையா !
எல்லாம் வல்ல, எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த இறைவனின்
அருளால்இதை எழுதச் சொன்ன ஆன்ம குருவிற்க்கு முதல் வணக்கம்.
கடுமையாக நேர்மையாக உழைக்க வேண்டும், உழைப்பில் வெற்றி பெற வேண்டும், நல்லவனாக சமுதாயத்தில் வாழ வேண்டும், பரம்பொருளை அறிய வேண்டும், ஆனந்தமாக வாழவேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்காக .............
தோன்றிற் புகழோடு தோன்றுக அக்திலார்
தோன்றினும் தோன்றாமை நன்று.
என்ற வள்ளுவரின் வார்த்தையை மெய்பிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ளவர்கள் படிப்பதற்காக இது எழுதப்பட்டது
இன்றைய இளைய சமுதாயம் தவறான கெட்ட பழக்க
வழக்கங்களாலும், பெரியோர்களின் வழி நடத்துதல் இல்லாமையினாலும்,
தன் மனம் போன படியெல்லாம் வளர்ந்து முடிவில் வாழ்வில் சோர்விற்கும்,
மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர். இன்றைய இளையசகோதர சகோதரிகள் பலர் நன்றாக படித்து பட்டங்களை பெற்றவர்களும், படிக்கின்ற காலத்தில் தவறான பழக்கங்களினால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களும் உண்டு. குடும்பச்சூழ்நிலை காரணமாக,
வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் போனவர்களும் நிறையவே உண்டு.
ஒரு சாதாரண கல் அழகான கடவுள் சிற்பமாகவோ, அரசியல் தலைவர்களின்
சிற்பமாகவோ வடிவம் எடுக்க எப்படி ஒரு கைதேர்ந்த
சிற்பி அவசியமோ, அதுபோல நமக்கும் நல்ல வாழ்க்கை அமைய
நாமும் அனுபவம் என்னும் சிற்பியால் சிறுகச்சிறுக செதுக்கப்படவேண்டும்.
இந்த அனுபவம் என்பது ஒவ்வொருவர் வாழ்கையிலும் ஒவ்வொருவிதம்,
ஆகவே உலகில் ஒரு சிலர் மட்டுமே உயர்ந்த நிலையிலும், உலகத்தாரால்
மதிக்கப்படுகின்றவர்களாகவும், பெயரும், புகழுடன் இருக்கின்றார்கள் என்றால், அவர்களை அந்த நிலை அடைய செய்தது சிறந்த கல்வியா? ,
செல்வமா? , இல்லை வேறு என்னவாக இருக்க முடியும்?.
இயற்கையின்(இறைவனின்) படைப்பில் அனைவரும் சமம், பிறகு
ஏன் இந்த பாகுபாடு ? இறைவனின் படைப்புகளில் அனைத்தையும் விட
உயர்ந்த படைப்பாக மனிதனை படைத்தார், மற்ற உயிர்களுக்கு கொடுக்காத
மிகச்சிறந்த உன்னதமான ஒன்றை மனிதனுள் வைத்தார். அதனை சரியாக
கையாண்டவர்கள் மட்டுமே உலகத்தில் உயர்ந்த நிலையை அடைகின்றனர்.
மனம்
ஆம் " மனம் " இதுதான் மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி,
இதனை எந்த அளவிற்கு மனிதன் பண்படுத்துகிறானோ அந்த
அளவிற்கு அவன் உயர்வடைகிறான். இந்த மனதை எப்படி பண்படுத்துவது?
அதற்கென எதாவது பயிற்சி உள்ளதா? என்றால் வாழ்வியல்
பாடத்திட்டத்தில் இதற்கு ஒரு தனி பாடதிட்டம் உள்ளது . அது என்ன?
தியானம்
வாழ்க்கை பாடத்திட்டத்தில் தியானம் என்ற பாடத்திட்டம் மிகவும் அவசியம்,
அலைபாயும் மனதினை கட்டுப்படுத்தி, பக்குவப்படுத்தி
சரியான பாதையில் நம்மை அழைத்து செல்லும் இந்த பயிற்சியை
தொடர்ந்து செய்துவருவதால் நமது மனம் என்னும் சாவியை கொண்டு
நம்முடைய முன்னேற்றத்தின் நுழைவு வாயிலான கதவின் பூட்டை திறக்கலாம்.
அப்படியானால் அந்த பூட்டு எது?
அறிவு
மனிதனை மட்டுமே அறிவுகளிலேயே ஆறு அறிவு கொண்ட உயிரினமாக
இறைவன் படைத்தான், அதனால் தான் தினம் ஒரு புதுமையை
மனிதன் படைக்கிறான்.சிந்திக்கவும், சிந்தனையின் வாயிலாக சரி எது?
தவறு எது ? என நன்கு பகுத்தறியும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. எனவே
இந்த ஆறாவது அறிவை விரிவு படுத்த முன்னேற்றத்தின் நுழைவு வாயில்
அனைவருக்கும் தயார் நிலையில் உள்ளது. அந்த நுழைவு வாயில் எது?
கல்வி
இந்த கல்வியின் வாயிலாக மனிதனை மனிதனாக செதுக்க முடியும்,
நம்மை மிகவும் சிறந்த மனிதனாக செதுக்கும் சிற்பியே இந்த கல்விதான்.
இந்த கல்வி மனிதனின் வாழ்கையில் மக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியில் ஏட்டுக்கல்வி, அனுபவக்கல்வி, என்ற இரண்டுமே தேவை, இவை
இரண்டும் நமது இரு கண்கள் போல பாவித்து வாழ்கையில் பயின்றோமானால் நாம் உயர்வடையலாம். வாழ்கையில் புத்தக கல்வியுடன்
அனுபக்கல்வியையும் கலந்து பயின்றால்வாழ்கை பாடத்திட்டத்தில் முதல்
மதிப்பெண் பெறலாம். இந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களே
உலகத்தார்களால் மதிக்கப்படுகின்ற சாதனையாளர்கள், இவர்களது சாதனைகளில் நுழைவு வாயிலான கல்வியை கற்க நாம் எப்படி சாவியை கண்டுபிடித்து பூட்டை திறந்து வாயிலில் நுழைந்தோமோ இவை அனைத்திற்கும் மேலான ஒன்றினை நாம் மறந்துவிட முடியாது, அது என்ன?
முயற்சி
எந்த ஒரு முயற்சியையும் செய்யாமலேயே எதையும் அடைய
முடியாது, முடியாது என்று மூலையில் முடங்கிக் கிடக்காமல், முயற்சி
எடுத்து முன்னேறியவர்கள் அதிகம். இவர்களது விடாமுயற்சியின்
பின்னணியில் மிகப்பெரிய புதையல் மறைத்திருக்கிறது. அந்த புதையலை
எப்படி கண்டுபிடிப்பது?
உழைப்பு
கடின உழைப்பும், அயராத மனமும் கொண்டவர்கள் வெற்றியாளர்கள்.
இந்த உழைப்பிலும் இரண்டு வகைகள் உள்ளன, அவைகள்
ஆக்கப்பூர்வமான உடல் உழைப்பும் ( Hard work), அறிவுப்பூர்வமான ( Smart Work) உழைப்பும் தேவைப்படுகிறது .கடின உழைப்பின் மூலம் அடையும்
பயனை அறிவார்ந்த உழைப்பை கொண்டு விரைவில் வெற்றிபெறலாம்
இந்த உழைப்பு என்னும் புதையலை தோண்ட பயன் படும் மிக முக்கியமான
ஆயுதம் எது ?
ஒழுக்கம்
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மற்றவர்களை
பார்த்துதான் எதையும் கற்றுக்கொள்கிறோம் , நல்ல பழக்கவழக்கங்கள்,
கெட்ட பழக்கவழக்கங்கள் , இரண்டுமே நாம் பழகும் பெற்றவர்கள் ,
நண்பர்கள் , உறவினர்கள் போன்ற மற்ற நபர்களின் மூலமாகவே
நமக்கு கிடைக்கிறது, எனவே வாழ்கையில் நல்ல நிலைக்கு
உயர நினைப்பவர்கள், நல்ல பழக்கவழக்கங்கள் கொண்ட நபர்களை
தேர்ந்த்தெடுத்து பழகிவந்தால் அவர்களது ஒழுக்கமான பண்புகள்
நம்மையும் வந்து அடையும்,நாமும்” வெற்றி ”என்ற புதையலை
விரைவில் அடையலாம்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றிபெற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்......
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2 comments:
ஐயா!
வணக்கம், தங்களது புதிய கருத்துக்களை விரைவில் வெளியிடவும்.
நன்றி!
வணக்கம் மாதவரங்கன் அவர்களே! உங்கள் கருத்து நன்றாக உள்ளது.
கல்வி, ஒழுக்கம் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்.கல்விக் கூடங்களிலேயே ஒழுக்கம் சீர்கெட்டு இருக்கும் இக்காலத்தில் இது போன்ற அறிவுரைகள் அவசியம்.
உங்கள் முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துகளும் ஆதரவும் நிச்ச்சயம் உண்டு.நன்றி.
Post a Comment