பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Saturday, March 9, 2013

சூக்கும சரீரம் மட்டுமே நிலையானது


இது உள்ளுடம்பு. இதைக்கொண்டு யாவற்றையும் உணர்ந்து கொள்ளலாம். தொலைவில் நிகழ்வதைப் பார்க்கலாம், கேட்கலாம். அப்படிப் பார்ப்பதும் கேட்பதும் புறத்தே உள்ள கண்களாலோ காதுகளாலோ அல்ல, சூக்குமமான அந்தக்கரண அறிவால், அவை அனுபவம் ஆகும்.

சூக்கும சரீரம் ஒளி பொருந்தியது, இந்த ஒளி தூய எண்ணம், தூய சொல், தூய செயல், இவற்றால் வருவதேயாகும். அது அறிவினால் சிறப்புப் பெற்றவர்களிடம் பொன்னிற ஒளியாகவும், பண்பால் சிறப்பு பெற்றவர்களிடம் வெண்ணிற ஒளியாகவும் விளங்குமாம்.

மூலாதாரத்தின் முக்கனலில் உருவாகிறது சூக்கும உடம்பு.

சித்தர்கள் சூக்கும தேகத்தை தூல தேகத்திலிருந்து பிரித்துக் கொண்டு விரும்பிய இடத்திற்குச் சென்று வந்து மீண்டும் தூல தேகத்துடன் பொருத்திக் கொள்வராம்.

இந்த சூக்கும தேகமானது தூல தேகத்தை பிரிந்தால் தூல தேகம் இயக்கமற்று நின்று விடும். இப்படி சூக்கும தேகம் பிரிதலே மரணம் எனப்படும்.

இந்த தூல தேகத்திலிருந்து பிரிந்த சூக்கும தேகத்தை , சூக்குமதேகத்திலிருந்து பிரிந்த வேறொரு தூல தேகத்தில் பொருத்துவதையே கூடு விட்டு கூடு பாய்தல் என்பர்.


உயிரைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது உடம்பு. இந்த உடலை தூல சரீரம் என்று அழைப்பர். உள்ளுடம்பை சூக்கும சரீரம் என்று அழைப்பர்.



தூல சரீரம்

உடம்பின் பயன் அறிவை உண்டு பண்ணுவது. இந்த உடம்பு பலவிதமான உணர்ச்சிகளைப் பெற்று மகிழ்கிறது. இவற்றில் எதுஅழியும் உணர்வு, எது அழியா உணர்வு என்பதைப் பகுப்பாய்வு செய்து அழியா உணர்வை அறிவதே அறிவுடையோர் செய்கின்ற கடமை ஆகும்.

பொதுவாக மனிதர்களை மூன்று வகையாக சித்தர்கள் சொல்வார்கள் அவையாவன,

சகலர் :- உடலறிவை மட்டும் பெற்றவர் சகலர் என்றும்,

பிரளயாகலர் :- உயிர் வாழும் பொது தேவர்களை எண்ணி வாழ்ந்து விட்டு, உயிரிழந்த பிறகு அந்நிலையைப் பெறுபவர்கள் பிரளயாகலர் என்றும்,

விஞ்ஞானகலர் :- உடல் உள்ளபோதே தேகத்தைப் பற்றி அறிந்து சூக்கும தேகத்தை வசப்படுத்தி அதில் முளுநினைவுடன் செயல்படும் ஆற்றல் கைவரப் பெற்று தேகத்தை விட்டு வாழும் வல்லமை பெற்றவர்களே விஞ்ஞானகலர் என்றும் சித்தர்கள் அழைப்பர்.

இந்த உடம்பு ( தூல சரீரம் ) உணவினால் உருவாக்கப்பட்டது, உணவால் பிழைத்திருக்கிறது, இந்த உடம்புக்கென்று உறுதியான குணமும் இல்லை அறிவும் இல்லை, நிலையற்ற இந்த உடலையே "நான்" என்று பலரும் அறியாமையால் கருதிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உண்மையிலேயே நிலையானது சூக்கும சரீரமே..


No comments: