பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Thursday, May 19, 2011

வெற்றி நிச்சயம்



வாழ்கையில் வெற்றிபெற விரும்புகின்ற நபர் தன்னுடைய இலக்கை அதாவது குறிக்கோளை சரியானபடி நிர்ணயிக்க வேண்டும், அதன் பிறகு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் விடாமுயற்சியுடன் ஒரே நோக்கத்தில் தன இலக்கை அடையும் வரை தளர்சியடையக் கூடாது . நமது விருப்பம் கல்வியா, ஓவியமா,விளையாட்டா, தொழிலா இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அதில் விடா முயற்சியுடன் போராடி வெற்றிபெறும்வரை பொறுமையுடன், தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும்.
அப்பொழுதுதான் நாம் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறமுடியும் ,
ஒவ்வொரு சாதனையாளர்களையும் நன்கு கவனித்து பார்த்தீர்களானால், அவர்கள் அனைவருமே பலவிதமான எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் கடந்து வந்தது நமக்கு நன்கு புலப்படும்.

நமது முன்னேற்றத்திற்கு முதல் எதிரியே முடியாது? என்ற சொல் ஒன்றுதான். இந்த சொல் நம்மிடையே இருந்தும் வரலாம், அல்லது நமக்கு வேண்டிய நபர்களிடமிருந்தும் வரலாம், நமது முன்னேற்றத்தை பாதிக்கும்
இந்த சொல்லை ஒருநாளும் நாம் ஏற்கக்கூடாது.

நமது செயல் வெற்றிபெற நமது பழக்கவழக்கங்கள் மற்றும் நம்முடன் பழகுபவர்களின் நட்பு இந்த இரண்டையும் நாம் கவனத்தில் வைக்கவேண்டும்,
ஏனெனில், நம்மை செயல்படாமல் நமது மனத்தில் எதிமறையான எண்ணங்களை இவைகள் அல்லது இவர்கள் உருவாக்கக்கூடும் .

ஒரு செயலை தொடங்கும் முன்பு அதன் சாதகமான, அல்லது பாதகமான விளைவுகளை அலசி ஆராய்ந்து பின்னர் அதை தேர்தெடுக்கவேண்டும், சரியென முடிவு செய்து  நமது குறிக்கோளை அடைய செயலில் இறங்கிவிட்டால் எத்தகைய எதிர்ப்புகள், பாதிப்புகள், தோல்விகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்.




9 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மாதவரங்கன் அவர்களே,

தாங்கள் புதிதாய் துவங்கியிருக்கிற இந்த எதிர்காலம் என்னும் வலைத்தளம் சிறக்க இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறோம்..

எல்லோரும் விரும்பும் எதிர்காலத்தையே தங்களது பிளாகர் பெயராக வைத்திருப்பது சிறப்பு.

நன்றி.
http://sivaayasivaa.blogspot.com

சி.எம்.ரங்கராஜ் said...

வணக்கம் ஜானகிராமன் அவர்களே,

தங்களது வருகைக்கும், பின் ஊட்டத்திற்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வருகை தந்து இத்தளம் சிறக்க உதவுங்கள்.

நன்றி

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மாதவரங்கன் அவர்களே,
சிவயசிவ என்னும் எமது வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்.. நன்றி

http://sivaayasivaa.blogspot.com

Unknown said...

வணக்கம் சார்,

உங்க முன்னேற்றம் கட்டுரை படித்தேன்..
மிக மிக அருமை.. எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இது அவசியமான ஒன்று..

நன்றி.

Sathish said...

வணக்கம் ஐயா,

தங்களது ஆக்கத்தை படித்தேன்..
நல்ல கருத்துகள்..

நன்றி..

Anonymous said...

வணக்கம் சார்,

//தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்//

என்ற தங்களது கருத்து எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது..

நன்றி..

சிவயசிவ said...

வணக்கம் மாதவரங்கன் அவர்களே!

எதிர்காலம், முன்னேற்றம் மங்களகரமான தொடக்கம்.

முடியாது என்ற வார்த்தை என் மனதில் புகமுடியாது என்ற உறுதியோடு வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.அருமையான கட்டுரை.

இதைப் படித்ததும் கவியரசு கண்ணதாசனின்,

"போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்
ஏற்றது ஒரு கருத்தை எனது உள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்"

என்ற வரிகளே நினைவுக்கு வந்தன.

நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...

Very useful and engargeing post . .

nagen said...

சிறப்பான அங்கம் தொடர்தும் உங்கள் பணி.